பிகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு தொடக்க பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துள்ளது.
முக்கியமாக, கடந்த மூன்றாண்டு காலத்தில் எந்த மாணவரும் அப்பள்ளியில் சேரவில்லை. இதன் காரணமாக அங்கு மதிய உணவு திட்டம் செயல்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.
நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளைச் சேர்ந்த பத்து மாணவர்கள் மட்டுமே படிக்கும் அந்த பள்ளியில் படிக்கின்றனர்.
இதுகுறித்து பள்ளி முதல்வர் அரவிந்த் மஞ்சி கூறுகையில், "பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும் கடந்த மூன்றாண்டு காலத்தில் எந்த மாணவரும் வந்து பள்ளியில் சேரவில்லை.
முதலாம், இரண்டாம், மூன்றாம் வகுப்பு பள்ளிறைகள் வெறிச்சோடிய நிலையில் காணப்படுகிறது. மாணவர்களின் பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நோக்கி செல்வதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது" என்றார்.
பள்ளி முதல்வர் மஞ்சியை தவிர்த்து மற்றொரு ஆசிரியர் பள்ளியில் பணிபுரிந்துவருகிறார்.
இதையும் படிங்க: தானேயில் இளைஞர்கள் மீது சரமாரி தாக்குதல்