டெல்லி: மகாராஷ்டிராவில் 2018ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம், கல்வி நிறுவனங்கள், அரசு வேலை வாய்ப்புகளில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்களான மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க இடமளித்தது.
இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து மும்பை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த மும்பை நீதிமன்றம், மராத்தா சமூகத்தினருக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீடு செல்லாது என தீர்ப்பளித்தது.
இந்த உத்தரவை பின்பற்றி மாநில அரசு, மராத்தா சமூகத்தினருக்கு கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு 13 விழுக்காடு ஆகவும், அரசு வேலை வாய்ப்புகளில் 12 விழுக்காடு ஆகவும் இடஒதுக்கீடு குறைத்தது.
இந்நிலையில் மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக பல்வேறு நபர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீடு வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, எஸ். ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.