தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கூடங்குளம் சைபர் தாக்குதல் பின்னணியில் வடகொரியா ? அதிர்ச்சி தகவல் - கூடங்குளம் சைபர் தாக்குதல் பின்னணியில் வடகொரியா

கூடங்குளம் சைபர் தாக்குதலுக்கு பின்னணியில் யார் இருக்கிறார் என்று அறிவது கடினமானது என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

KUDANKULAM

By

Published : Nov 5, 2019, 11:24 PM IST

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இணையதளம் கடந்த மாதம் 29ஆம் தேதி ஹேக் செய்யப்பட்டு தகவல் திருட்டு நடந்திருப்பதாகவும், இதன் பின்னணியில் வடகொரியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் இருப்பதாகவும் தென் கொரியா தகவல் வெளியிட்டுள்ளது.

இது தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உலக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், வட கொரியா தொடர் அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருவதே இந்த அச்சத்துக்குக் காரணம்.

கூடங்குளம் சைபர் தாக்குதல் குறித்து தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் ( National Technical Research Organisation) முன்னாள் அலுவலர் ஒருவரிடம் கேட்டபொழுது, "சைபர் தாக்குதல்களைப் பொருத்தவரை, தாக்குதல் நடத்தும் நபர்கள் தங்களது முகவரிகளையும், சைபர் தடையங்களையும் தந்திரமாக அழித்து விடுவர். அப்படியிருக்க, எது அப்பட்டமான உண்மை என தோன்றுகிறதோ அது உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நட்பு நாடுகள் கூட இதுபோன்ற சைபர் தாக்குதல் நடத்திவிட்டு, பின் சைபர் தடையங்களை அழித்துவிடுகின்றன" எனக் கூறுகிறார்.

இதுபோன்ற கருத்தைத்தான் வோலன் சைபர் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் முஸ்லிம் கோஷர் கூறுகிறார்.

இதையும் வாசிங்க : மூச்சு முட்டும் தலைநகர் - உச்சத்தில் காற்றுமாசு!

ஈடிபி பாரத்துக்கு அவர் பேட்டியளிக்கையில், "ஊடகங்களில் சொல்வது போன்று வடகொரியா தான் இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கிறதென்று சொல்லமுடியாது. 'லசாரஸ்' என்ற வடகொரிய ஹேக்கிங் குழு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம்.

பொதுவாக இதுபோன்ற ஹேக்கின் குழுக்கள் பணத்துக்காக நிதி நிறுவனங்கள், பெரு நிறுவனங்களையே குறிவைத்துத் தாக்குகின்றன. ஆனால் கூடங்குளம் விஷயம் இதிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது ( தகவல் திருட்டு). ஆனால், சமீபகாலமாக அவர்கள் ( லசாரஸ்) தகவல் திருட்டு தாக்குதல்களிலும் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. எனினும், இதனை உறுதிப்படுத்த போதிய ஆதாரங்கள் இல்லை.

தகவல் திருட்டில் ஈடுபடும் அனுபவமற்ற குழுக்கள் பொதுவாக TTP ( Tools, Tatics, Procedure) முறையைப் பயன்படுத்துகின்றன. முகவரியை மறைக்க மற்ற குழுக்களின் TTP-யை பயன்படுத்தி தங்களின் தடயத்தை மறைப்பதுண்டு" என்றார்.

லசாரஸ் குழுவால் தயாரிக்கப்பட்ட DTRACK என்ற வைரல் மூலமே கூடங்குளம் இணையதளம் ஹேக் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த டி-டிராக் வைரஸ் மூலம் தொலைதூரத்திலிருந்து கணினிகளை இயக்க முடியும். இதுதவிர தாக்குதலுக்குள்ளாகும் கணினியிலிருந்து தகவல்களையும் திருடமுடியும் என கேஸ்பர்ஸ்கை தெரிவிக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details