அண்ணல் காந்தியடிகளின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, ட்விட்டரில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், “தேசத்தந்தை, அண்ணல் காந்தியடிகளின் 150ஆவது பிறந்த தினத்தில் என்னுடைய அஞ்சலியை செலுத்துகிறேன். வாழும் உயிர்களிடம் அன்பு செலுத்த வேண்டும் என்று அவரின் கொள்கைகள் மற்றும் நம்பிக்கைகள் நமக்கு போதிக்கின்றன. ஒடுக்குமுறை, மதவெறி மற்றும் வெறுப்புணர்வு ஆகியவற்றை அழிக்கும் ஒரே ஆயுதம் அகிம்சை” என்று குறிப்பிட்டுள்ளார்.
அகிம்சை மதவெறியை வீழ்த்தும்: ராகுல் காந்தி ட்வீட் - மதவெறி குறித்து ராகுல்காந்தி
ஒடுக்குமுறை, மதவெறி, வெறுப்புணர்வு போன்றவற்றை வீழ்த்தும் ஒரே ஆயுதம் அகிம்சைதான் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியுள்ளார்.
Rahul Gandhi
மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.