தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அசைவம், குளிர்ந்த, வெப்பமான சூழலுக்கும் கொரோனாவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை - எய்ம்ஸ் இயக்குனர் - அசைவம் உட்கொள்வதால் கொரோனா பரவாது எய்ம்ஸ் இயக்குனர் விளக்கம்

டெல்லி: கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு தொடுதல் மூலம் தொடர்பு கொள்வதினாலேயே பரவுகிறது, அசைவம், முட்டை ஆகிய உணவுகளை உட்கொள்வதனால் நோய்த்தொற்று ஏற்படுவதில்லை என்று எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

Non-veg food, hot or cold temp have nothing to do with corona: AIIMS Director
அசைவம் உட்கொள்வதால் கொரோனா பரவாது எய்ம்ஸ் இயக்குனர் விளக்கம்

By

Published : Mar 14, 2020, 9:58 PM IST

"சுகாதார முன்னெச்சரிக்கையாக, அனைத்து வகையான இறைச்சிகளையும் நன்கு கழுவி சுகாதாரமான முறையில் சமைக்க வேண்டும்" என்று எய்ம்ஸ் இயக்குனர் கூறினார்.

வெப்பநிலை அதிகரிக்கும் போது COVID-19 (கொரோனா) வைரஸ்ஸின் தீவிரம் குறைந்து, இறுதியில் மறைந்துவிடும் என்ற கூற்றை அவர் மறுத்துள்ளார். மேலும் "ஐரோப்பிய நாடுகளின் குளிரான சூழலைப் போலவே சிங்கப்பூரின் வெப்பமான ஈரப்பதமான வானிலையிலும் வைரஸின் தாக்கம் தீவிரமானது" என்று அவர் கூறியுள்ளார்.

ஒரு குடியிருப்பில் வசிக்கும் கொரோனா வைரஸ்ஸால் பாதிக்கப்பட்ட ஒரு நபரை, மற்றவர்கள் தொடுதல் மூலம் தொடர்பு கொள்ளாத வரை, அவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று டாக்டர் குலேரியா கூறினார்.

கிராம்பு உள்ளிட்ட பிற மூலிகைகள் உட்கொள்வது கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக எந்த பயனையும் அளிக்காது என்றும், மேலும் "மது அருந்துவதினால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியாது" என்றும் அவர் கூறினார்.

ஆகவே கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள அடிக்கடி கைகளை சோப்பு கொண்டு கழுவி சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். சோப்பு இல்லையென்றால் சுத்திகரிப்பானையும் பயன்படுத்தலாம்," என்று அவர் கூறினார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details