கரோனா அச்சுறுத்தல் காரணமாக கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து சரிந்த வண்ணம் உள்ளது. இதனால், உலகளவில் பெட்ரோல், டீசலின் விலை வரலாறு காணா அளவிற்கு குறைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணை விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதந்தோறும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.
இந்நிலையில், மானியம் இல்லா சிலண்டரின் விலை கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் குறைக்கப்பட்ட சூழலில், தற்போது மூன்றாவது முறையாக இந்த மாதமும் சிலிண்டர் விலையை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறித்துள்ளன.
அந்த வகையில் 14.2 கிலோ மானியமில்லாத சிலிண்டரின் விலை டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் சமையல் சிலண்டரின் விலை ரூ.160 குறைந்து ரூ.569.50க்கு விற்பனை செய்யப்படும்.
அதேபோல, டெல்லியில் சிலிண்டரின் விலை ரூ.744 இருந்து 581.50 ரூபாய்க்கும், மும்பையில் ரூ.579க்கும், கொல்கத்தாவில் ரூ.584.50க்கும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் நடைமுறைக்குவருகிறது.
இதையும் படிக்க: கரோனா பரவல்: முப்படை உயர் அதிகாரிகளுடன் ராஜ்நாத் சந்திப்பு