வளைகுடா அல்லாத நாடுகளைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அஞ்சல் வாக்குரிமையை வழங்க இந்திய தேர்தல் ஆணையம் முன்மொழிந்துள்ளது. கடந்த வாரம் தேர்தல் ஆணைய அலுவலர்கள், வெளியுறவுத் துறை அலுவலர்கள் நடத்திய கூட்டத்தில், இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தச் செயல்முறைக்குத் தேவையான மனிதவளத்தை தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டும்.
முதல்கட்டமாக அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் அஞ்சல் வாக்குப்பதிவில் சேர்க்கப்படலாம். திட்டத்தின்படி, "இந்தச் செயல்பாட்டில் ஒரு நியமிக்கப்பட்ட அலுவலர் சேர்க்கப்படுவார், அவர் வாக்காளர் சார்பாக வாக்குப்பதிவை பதிவிறக்குவார்.
வெளிநாட்டு வாக்காளர் விருப்பப்படி, வாக்குச்சீட்டில் குறிக்கப்பட்டு அலுவலரிடம் ஒப்படைக்க முடியும். இந்திய மிஷன் அலுவலர் சான்றளித்த சுய அறிவிப்பு படிவம் வாக்குச் சீட்டுடன் இந்தியாவுக்கு வெளியிடப்படும். தற்போது பாதுகாப்புச் சேவைகளில் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய மின்னணு முறையில் அனுப்பப்பட்ட அஞ்சல் வாக்குச் சீட்டு (ETPBS) இன்கீழ், அஞ்சல் வாக்குச்சீட்டு மின்னணு முறையில் அனுப்பப்பட்டு சாதாரண அஞ்சல் வழியாகத் திருப்பி அனுப்பப்படுகிறது.
இந்த வசதியை வெளிநாட்டு வாக்காளர்களுக்கு விரிவுபடுத்துவதற்கு, தேர்தல் நடத்தை விதிகளை 1961இல் அரசு திருத்த வேண்டும். அடுத்த ஆண்டு கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு இந்த முறை செயல்படுத்தப்படும்.