உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் இருக்கும் ஜே.பி. பவிலியன் பகுதியில் ஸ்ரீரஞ்சனி என்பவர் தனது ஐந்து வயது மகள் ஜெயஷிர்த்தாவுடன் வசித்துவந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஸ்ரீரஞ்சனி, வீட்டிலிருந்த தனது மகளைக் கொலை செய்துவிட்டு தானும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வெளிநாட்டில் வேலை செய்துவந்த ஸ்ரீரஞ்சனியின் கணவர் பரத் (33) கடந்த செப்டம்பர் மாதத்தில் நொய்டாவிற்கு தனது குடும்பத்தைக் காண வந்துள்ளார். மனைவியும் மகளும் இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு, அவர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயில் முன் குதித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.