தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போலீசை தொடர்புகொள்ள இனி எஸ்எம்எஸ் அனுப்பினால் போதும்!

நொய்டா (உத்திரப் பிரதேசம்): பொதுமக்களின் சேவைக்காக நொய்டா காவல்துறை குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கக்கூடிய பிரத்யேக தொலைபேசி எண்ணை அறிமுகம் செய்துள்ளது.

noida polic department
noida polic department

By

Published : Feb 22, 2020, 3:11 AM IST

பொதுமக்களின் சேவைக்காக நொய்டா காவல்துறை 8800845816என்ற எண்ணை பிரத்யேகமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ரோந்துப் பணியை மேம்படுத்தப்பட வேண்டிய இடங்கள் குறித்து பொதுமக்கள் காவல்துறையினருக்கு, இந்த எண் மூலம் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம்.

போக்குவரத்து பிரச்னைகள் தொடர்பாகவும் குறுஞ்செய்தி வாயிலாக தங்கள் கருத்துக்களை மக்கள் தெரிவிக்கலாம் என்று நொய்டா காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) மட்டுமே அனுப்ப வேண்டும் என்றும், தொலைபேசி அழைப்புகளுக்கு இதனை பயன்படுத்த வேண்டாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Noida Police Department

இந்த எண்ணில் அனுப்பப்பட்ட வாட்ஸ்அப் செய்திகள், குறுஞ்செய்தி ஆகியவற்றைக் கண்காணிக்க அலுவலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், அவசரகால சூழ்நிலைகளுக்கு, மக்கள் தொடர்ந்து 112 எண்ணை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நொய்டா காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:மூதாட்டியின் பசி தீர்த்த காவலர் - வைரல் வீடியோ

ABOUT THE AUTHOR

...view details