காஷ்மீரின் பாம்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 2 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் மூவர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தின் போது காவல்துறையினரின் ஆயுதங்களை பயங்கரவாதிகள் பறித்துச் சென்றதாக தகவல் வெளியானது. இந்த தகவலை காஷ்மீர் காவல்துறை தலைவர் விஜயகுமார் மறுத்துள்ளார்.
பயங்கரவாதிகளின் தாக்குதலில் ஆயுதங்கள் பறிபோகவில்லை - காஷ்மீர் ஐஜி தகவல்
ஸ்ரீநகர்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தின் போது, காவல்துறையினரின் ஆயுதங்களை அவர்கள் பறித்துச் சென்றதாக தகவல் வெளியான நிலையில், ஜம்மு காஷ்மீர் காவல் துறை தலைவர் அதனை மறுத்துள்ளார்.
காஷ்மீர் ஐஜி தகவல்
இது குறித்து மேலும் அவர், "தாக்குதல் நடத்தியவர்களில் அடையாளங்களை கண்டறிந்துள்ளோம். அதில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். அவரின் பெயர் சைபுல்லா. அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
காஷ்மீர் முழுவதும் காவல் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. போலி மொபைல் நம்பர்களை பயங்கரவாதிகள் பயன்படுத்துவது சவாலாக இருக்கிறது. இதனைத் தீர்க்க தொழில்நுட்ப ரீதியாக முயன்று வருகிறோம்" என்றார்.