தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'பிரதமரிடம் எதிர்காலப் பார்வை இல்லை'- சசிதரூர் - பிரதமர் மோடி காணொலி செய்தி வெளியீடு

திருவனந்தபுரம்: பிரதமர் நரேந்திர மோடியிடம் எதிர்காலத்தைப் பற்றிய பார்வை இல்லை என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் சசி தரூர் கூறியுள்ளார்.

Shashi Tharoor  COVID-19  CORONAVIRUS  'பிரதமரிடம் எதிர்கால பார்வை இல்லை'- சசிதரூர்  பிரதமர் மோடி காணொலி செய்தி வெளியீடு  கரோனா வைரஸ், பரவல், அச்சம், டெல்லி
Shashi Tharoor COVID-19 CORONAVIRUS 'பிரதமரிடம் எதிர்கால பார்வை இல்லை'- சசிதரூர் பிரதமர் மோடி காணொலி செய்தி வெளியீடு கரோனா வைரஸ், பரவல், அச்சம், டெல்லி

By

Published : Apr 3, 2020, 5:31 PM IST

பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை 9 மணிக்கு காணொலி காட்சி மூலமாக வெளியிட்ட செய்தியில், “ஏப்ரல் 5ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனைவரும் தங்களின் வீடுகளிலுள்ள மின் விளக்குகளை அணைத்துவிட்டு, அகல் விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஏற்றுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

இது குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவரும் திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசிதரூர், அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும் பிரதமரின் உரையில் எதிர்கால பார்வை இல்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக, சசிதரூர் வெளியிட்ட ட்விட்டரில், “பிரதமர் மோடியின் உரையில் எதிர்காலத்தைப் பற்றிய பார்வை இல்லை.

மக்களின் வலியை, அவர்களின் சுமைகள், நிதி கவலைகளை எவ்வாறு குறைப்பது என்பது பற்றி எதுவும் இல்லை. புகைப்படத்துக்குப் போஸ் கொடுக்கும் பிரதமரால் ஏற்பட்ட நல்ல தருணம்” என கூறியுள்ளார். சசி தரூர் வெளியிட்ட மற்றொரு ட்விட்டரில், நாடாளுமன்றத் கூட்டத் தொடர் முடிந்த நிலையிலும், டெல்லியில் தவிப்பதாகக் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: '9 நிமிடங்கள் அகல் விளக்கு ஏற்றுங்கள்'- நரேந்திர மோடி

ABOUT THE AUTHOR

...view details