கரோனா வைரஸ் காரணமாக மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு திண்டாடிவருகின்றனர். தெலங்கானா மாநிலம் கம்மா ரெட்டி மாவட்டத்தில் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடல் மருத்துவமனைக்குச் சைக்கிளில் கொண்டுசெல்லப்பட்ட சம்பவம் பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காவல் துறையினர் தரப்பில், '' ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட அந்த நபர் ஏழைகளுக்கான தங்குமிடத்தில் இருந்தார். சில ஆண்டுகளாக ஹெச்ஐவிக்குச் சிகிச்சைப் பெற்றுவந்த அவர், சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை மருத்துவமனைக்கு கொண்டுசென்று உடற்கூறாய்வு செய்ய ஆம்புலன்சை அழைத்தோம்.