தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குடிமைப் பணிகள் தேர்வு : ஜம்மு-காஷ்மீர்வாசிகளுக்கு வயது வரம்பு சலுகை கட் - குடிமைப் பணிகள் தேர்வு 2020

டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள குடிமைப் பணிகள் தேர்வில் ஜம்மு-காஷ்மீர் விண்ணப்பதாரர்களுக்கு அளிக்கப்பட்ட வயது வரம்பு விதிகள் தளர்த்தப்படாது என குடிமைப் பணிகள் ஆணையம் அறிவித்துள்ளது.

UPSC, இந்திய குடியுமைப் பணிகள் தேர்வு
UPSC

By

Published : Feb 13, 2020, 4:53 PM IST

இதுதொடர்பாக குடிமைப் பணிகள் ஆணையம் வெளியிட்டிருந்த அறிக்கையில், "2020 குடிமைப் பணிகள் தேர்வு மூலமாக இந்த ஆண்டு 796 காலி இடங்கள் நிரப்பப்படவுள்ளன. இத்தேர்வு வரும் மே 31ஆம் தேதி நடைபெறும்.

இந்தத் தேர்வை எழுத விண்ணப்பதாரர்கள் 2020 ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குள் குறைந்தது 21 வயதையும், அதிகபட்சமாக 32 வயதையும் அடைந்திருக்க வேண்டும். அதாவது, 1998 ஆகஸ்ட் 2ஆம் தேதி முன்பு பிறந்தவர்களும், 1999 ஆகஸ்ட் 1ஆம் தேதி பிறந்தவர்களும் தேர்வெழுத முடியாது.

அதிகபட்ச வயது வரம்பு, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரையிலும், மற்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரையிலும் தளர்த்தப்படுகிறது" எனக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த ஆண்டு வெளியான அறிக்கையில் அப்போதைய ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு ஐந்து ஆண்டுகள் வரை தளர்த்தப்படுவதாகக் கூறப்பட்டிருந்தது.

இந்தத் தகவல் தற்போது வெளிவந்துள்ள அறிக்கையில் இடம்பெறவில்லை என்பதால், ஜம்மு-காஷ்மீர் விண்ணப்பாதாரர்களுக்கு இந்த ஆண்டு குடிமைப் பணிகள் தேர்வில் அதிகபட்ச வயது வரம்பு தளர்வு வழங்கப்படமாட்டாது என தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க :இஸ்ரோவில் மூன்று நாள் பயிற்சி: தலைமையாசிரியர்களுக்குப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details