தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவை ஆயுதங்களால் எதிர்க்க முடியாது - மோடிக்கு ஆதரவு குரல் கொடுத்த சிதம்பரம் - கரோனாவை ஆயுதங்கள் மூலம் எதிர்க்க முடியாது

டெல்லி: கரோனாவை ஆயுதங்கள் மூலம் எதிர்க்க முடியாது, ஊரடங்கு மூலமே கட்டுப்படுத்த முடியும் என காங்கிரஸ் மூத்தத் தலைவர் சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

Modi
Modi

By

Published : Mar 20, 2020, 9:30 PM IST

கரோனா வைரஸ் இந்தியா முழுவதும் வேகமாக பரவிவருகிறது. இதுவரை, 223 பேர் கோவிட் 19 நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, மார்ச் 22ஆம் தேதி மக்கள் ஊரடங்கை பின்பற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "கோவிட் 19 நோய் பரவல் இரண்டாவது நிலையில்தான் உள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. இது செயல்பட வேண்டிய நேரம். சரியான நடவடிக்கை எடுக்காமல் நேரம் கடத்தி அதற்காக வருத்தப்பட வேண்டாம்.

வரும் காலங்களில் நோயை கட்டுப்படுத்தும் விதமாக கடும் சமூக, பொருளாதார கட்டுப்பாடுகளை பிரதமர் விதிப்பார் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அவர் துணிச்சலாக செயல்பட வேண்டும். கரோனாவுக்கு எதிரான போரை ஆயுதங்களை பயன்படுத்தி எதிர்க்க முடியாது” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கரோனா விழிப்புணர்வு - முகக்கவசத்துடன் திருமணம்!

ABOUT THE AUTHOR

...view details