நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கோவிட்-19 நோயாளிகள் உள்ள 15 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நாளை(ஜூன் 17) காணொலி அழைப்பின் மூலம் பேச இருக்கிறார். இந்த கரோனா பரவலுக்கு தினசரி கூலித் தொழிலாளர்களின் இடம்பெயர்தலால் தான், பெரும்பாலான மாநிலங்கள் மிக மோசமான பாதிப்புக்குள்ளாயின என சிலர் கூறுகின்றனர்.
கோவிட்-19 ஆய்வுக் கூட்டம்: மேற்கு வங்கத்திற்கு பேச எந்த சந்தர்ப்பமும் வழங்கப்படவில்லை! - கொல்கத்தா
கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநில முதலமைச்சர்கள் மேற்கொண்ட கோவிட் -19 நோய்த் தொற்று குறித்த இரண்டு நாள் ஆய்வுக் கூட்ட உரையாடலில் மேற்கு வங்க மாநிலத்திற்கு, பேசுவதற்கு எந்த சந்தர்ப்பமும் வழங்கப்படவில்லை என்று மாநிலச் செயலகம் தெரிவித்துள்ளது.
கோவிட் -19 தொற்று குறித்த ஆய்வு கூட்டத்தில் மேற்கு வங்கத்திற்கு பேச எந்த சந்தர்ப்பமும் வழங்கப்படவில்லை
இது தொடர்பாக ஆய்வு செய்ய நாளை (ஜூன் 17ஆம் தேதி), நடக்கும் கூட்டம் தொடர்பான இரண்டாவது பட்டியலில் மேற்கு வங்க மாநிலம் இடம்பெற்றிருந்தாலும், கரோனா தொற்று நிலைமையை எடுத்துரைப்பதற்கு மேற்கு வங்கத்திற்கு குறிப்பிட்ட கால அவகாசம் எதுவும் வழங்கப்படவில்லை என்று மாநிலச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று (ஜூன் 16ஆம் தேதி), நண்பகல் 3 மணிக்கு, 21 முதலமைச்சர்களிடம் பிரதமர் மோடி காணொலி அழைப்பின் மூலம் கரோனா பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.