தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உலகளாவிய சுற்றுலாவைத் தொடங்குவதற்கு கால அளவு இல்லை, செலவுகள் அதிகரிக்கும் - நிபுணர்கள் - Senior Journalist Smita Sharma

மூத்த பத்திரிகையாளர் ஸ்மிதா ஷர்மாவுடனான ஒரு பிரத்யேக உரையாடலில், இந்திய தூதர் சஞ்சய் சுதிர், சர்வதேச சுற்றுலாவை தொடங்குவதற்கு  நாட்டின் புவியியல் அமைப்பு  ஒரு முக்கிய காரணியாகும், இது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என்று கூறினார்

இந்திய மாலத்தீவு
இந்திய மாலத்தீவு

By

Published : Jul 30, 2020, 10:34 PM IST

ஒரு கோவிட் 19 தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதற்கு உலகம் இன்னமும் சிரமப்பட்டுவரும் நிலையில், சில நாடுகள் வைரஸின் இரண்டாவது அலையை எதிர்கொள்ள தயாராகி வருவதால், உலகளாவிய சுற்றுலா தொடர்ந்து சிரமத்தில் இருக்கும், மேலும் சர்வதேச பயணங்களுக்கான செலவுகள் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இருப்பினும் பல நாடுகள் உள்நாட்டு சுற்றுலாவைத் தொடங்கி வருகின்றன. மாலத்தீவு போன்ற நாடுகள் இந்த மாதத்தில் சர்வதேச சுற்றுலா பயணிகளை வரவேற்கத் தொடங்கியுள்ளன.

மாலத்தீவின் பொருளாதாரத்தில் 80 விழுக்காடு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சுற்றுலாவை நம்பியுள்ள நிலையில், சிறிய தீவு நாடு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்து உறுதியளித்து வருகிறது. மூத்த பத்திரிகையாளர் ஸ்மிதா ஷர்மாவுடனான ஒரு பிரத்யேக உரையாடலில், இந்திய தூதர் சஞ்சய் சுதிர், சர்வதேச சுற்றுலாவை தொடங்குவதற்கு நாட்டின் புவியியல் அமைப்பு ஒரு முக்கிய காரணியாகும், இது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என்று கூறினார்

உலகின் இந்த பகுதியில் சுற்றுலாவைத் தொடங்கிய முதல் நாடு மாலத்தீவு தான். ஜூலை 15ஆம் தேதி தொடங்கி சுற்றுலாப் பயணிகள் கொஞ்சம் கொஞ்சமாக வரத் தொடங்கியுள்ளனர். சுற்றியுள்ள 200 ரிசார்ட்டுகளில் 57-60 ரிசார்ட்டுகள் செயல்பட தொடங்கி விட்டன. இவையெல்லாம் சிறிய தீவுகளாக இருப்பதால் அவற்றைக் கட்டுப்படுத்துவது சுலபமாக இருக்கும்.

ஆனால் அதே நேரத்தில் தலைநகர் மாலே மிகவும் நெரிசலான நகரம். இங்கே கோவிட் இருந்தால் அது மிகவும் கடினமாக இருக்கும், ஆனால் விமான நிலையத்தில் தரையிறங்கும் பயணிகளுக்கு, அவர்கள் நேராக தீவுகளுக்குச் செல்லும் வகையில் ஒரு பாதுகாப்பான வழியை உருவாக்கியுள்ளனர். அவர்கள் விடுமுறையைக் கழித்து விட்டு மீண்டும் விமான நிலையத்திற்கு வந்து புறப்பட்டு செல்கிறார்கள் என்று சஞ்சய் சுதிர் கூறினார்.

5 லட்சம் மக்கள்தொகை கொண்ட மாலத்தீவுக்கு 1.7 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். ​​மாலத்தீவுகள் தனது பொருளாதாரத்தை மீட்டெடுக்க போராடுகையில், மும்பை மற்றும் கொச்சியிலிருந்து ஆகஸ்ட் நடுப்பகுதியில் குறைந்த அளவிலான வணிக விமான போக்குவரத்து நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படும் என்று நம்பப்படுகிறது.

இரு நாடுகளுக்கிடையில் சாத்தியமான ‘இருதரப்பு விமான சேவையை’ உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதை சஞ்சய் சுதிர் உறுதிப்படுத்தினார். மேலும் அவர் கூறுகையில் ”சுற்றுலாவில் நாம் 5வது இடத்தில் இருந்தோம், பின்னர் நமது சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை இரட்டிப்பாகியதால், இப்போது நாம் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம். ஆனால் இணைப்பு இல்லாமை மற்றும் கோவிட் நிலைமை காரணமாக நமது சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துவிட்டது. இந்த நாட்களில் இருதரப்பு விமான சேவையை’ தொடங்க நாங்கள் முயற்சித்து வருகிறோம். இதற்காக நாங்கள் இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் ஏர் இந்தியாவுடன் தொடர்பு கொண்டுள்ளோம், அனைத்தும் சரியாக நடந்தால், இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையில் குறைந்த எண்ணிக்கையிலான விமானங்களை இயக்க முடியும்” என்று கூறினார்.

நமக்கு கிடைத்த இந்த ஆரம்பம், இரு நாடுகளுக்கும் மிகவும் முக்கியமானது, இந்த நாடு தீவுகளின் கட்டமைப்பால் இருப்பதால் மிகவும் பாதுகாப்பான இடமாகும். பாதிக்கப்பட்ட பகுதிகள் என்பது பாதிக்கப்பட்ட பகுதிகளாகவே இருக்கும். ஆனால் அதைத் தவிர மற்ற விஷயங்களில் நாடு மிகவும் பாதுகாப்பானது என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், மீண்டும் சர்வதேச அளவில் மக்கள் வருவதற்கான நம்பிக்கையைப் பெறுவது என்பது சர்வதேச விருந்தோம்பல் மற்றும் விமானத் துறைகள் எதிர்கொள்ளும் பல சவால்களில் ஒன்று. தற்போதைய நிலையில் தாய்லாந்து அல்லது ஐரோப்பிய நாடுகள் போன்ற பிரபலமான சுற்றுலா தலங்களுக்கு, வருவாயின் ஆதாரம் என்பது உள்நாட்டு சுற்றுலா மூலம் தான்.

"அதிகமான ஜெர்மனியர்கள் நாட்டிற்கு முதல் முறையாக விடுமுறைக்கு வருகிறார்கள். வீட்டில் தங்காத பெரும்பாலான ஜெர்மனியர்கள் தெற்கு ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ் ஆகிய நாடுகளுக்குச் செல்கின்றனர், அவை ஸ்பெயினில் சமீபத்திய நோய்தொற்று அதிகரித்த பட்டியலில் உள்ளன. அந்த நாடுகளிலிருந்து திரும்பி வரும் சுற்றுலாப் பயணிகளைப் பற்றி நாங்கள் ஜெர்மனியில் கலந்துரையாடி வருகிறோம். அவர்கள் சோதிக்கப்பட்டால், தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

ஜெர்மனியை பொறுத்தவரை தாய்லாந்து மற்றும் வியட்நாம் மட்டுமே சாதகமான பட்டியலில் உள்ள இரண்டு ஆசியா நாடுகள். கோட்பாட்டளவில் சீனாவும் உள்ளது ஆனால் பரஸ்பரம் இருந்தால் மட்டுமே அது முடியும். ஜெர்மனிய சுற்றுலாத் துறையில் சிரமங்கள் உள்ளன, ஆனால் அவை எதிர்பார்த்த அளவுக்கு பெரிய அளவில் இல்லை, ஏனெனில் அதிகமான ஜெர்மனியர்கள் வீட்டில் தங்கியிருக்கிறார்கள்” என்று டெல்லியில் உள்ள ஜெர்மன் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹான்ஸ் கிறிஸ்டியன் விங்க்லர், ஸ்மிதா ஷர்மாவிடம் கூறினார்.

எவ்வாறாயினும், இயக்க செலவு அதிகரிப்பதால் சர்வதேச பயண கட்டணம் உயரக்கூடும் என்று அவர் எச்சரித்தார். "ஜெர்மனியில் வரும் பெரும்பாலான மக்கள் நமது அண்டை நாடுகளான பிரான்ஸ், நெதர்லாந்து, இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள். ஆனால் இது, இயக்கச் செலவுகள் அதிகம் ஆனதால், ஜெர்மனிக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அல்ல.

இந்தியாவில் உள்ளதைப் போலவே ஹோட்டல்களும் உணவகங்களும் வாடிக்கையாளர்களை அதிக எண்ணிக்கையில் அழைத்துச் செல்ல முடியாது, பிரான்சில் ஏர் பிரான்ஸ் அல்லது ஜெர்மனியில் லுஃப்தான்சா போன்ற விமான நிறுவனங்களை வரி செலுத்துவோர் மூலம் காப்பாற்றப்பட வேண்டிய மிகவும் முக்கியமான நிலைமை எங்களுக்கு உள்ளது. எனவே இந்த நிறுவனங்களை திவால் நிலையிலிருந்து காப்பாற்ற பங்குகளை மாநிலங்கள் வாங்கியுள்ளன. சுற்றுலா இயக்குனர்கள் மற்றும் விமான நிறுவனங்கள் ஆகியவை மிகவும் கடினமான சூழ்நிலையில் உள்ளன.

ஹோட்டல்களும் உணவகங்களும் தப்பிப் பிழைத்து வருகின்றன, ஆனால் ஜெர்மனியில் சில புகழ்பெற்ற உணவகங்கள் செயல்பாடுகளின் செலவு அதிகரித்துள்ளதால் மூடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களிடமிருந்து நீங்கள் வாங்கக்கூடிய தொகைக்கு ஒரு குறிப்பிட்ட உச்சவரம்பு உள்ளது. எனவே அவர்களில் சிலர் மிகவும் சிக்கலான சூழ்நிலையில் உள்ளனர்” என்று கூறிய ஹான்ஸ் கிறிஸ்டியன், சில ஐரோப்பிய நாடுகள் இரண்டாவது அலையால் பாதிக்கப்படலாம் என்பதால், மீட்புக்கான கால அளவைப் பற்றி பேசுவது கடினம் என்று எச்சரித்தார்.

ஜூலை 1ம் தேதி ஐ.நா. வர்த்தக மற்றும் மேம்பாட்டு மாநாடு (UNCTAD) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலக சுற்றுலாத் துறை குறைந்தது 1.2 டிரில்லியன் அமெரிக்க டாலர் அல்லது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 விழுக்காட்டை இழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.நா. உலக சுற்றுலா அமைப்பின் மதிப்பீடுகளின்படி, வெளிநாட்டிற்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 2019-ம் ஆண்டின் 29 மில்லியனிலிருந்து 2020ஆம் ஆண்டில் 10 மில்லியனாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், 2017ஆம் ஆண்டின் 23 மில்லியனிலிருந்து, சுமார் 50 மில்லியன் இந்தியர்கள் கோவிட்டிற்கு முன், வெளிநாடுகளுக்குப் பயணித்திருப்பார்கள் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, மாலத்தீவு நேபாளம், ஸ்ரீலங்கா பூட்டான் ஆகியவை இந்தியர்களுக்கான சிறந்த சுற்றுலா தலங்களாகும். புதுடில்லியில் உள்ள தாய்லாந்தின் சுற்றுலா ஆணையத்தின் இயக்குனர் வச்சிராச்சாய் சிறிசும்பன், சர்வதேச சுற்றுலா விரைவில் புத்துயிர் பெற வாய்ப்பில்லை என்று கருதுகிறார்.

உள்நாட்டு சுற்றுலா, தற்போது தாய்லாந்தில் கிட்டத்தட்ட சாதாரண நிலைக்கு திரும்பியுள்ளது. எனவே மக்கள் சுதந்திரமாக நாடு முழுவதும் பயணம் செய்யலாம். சர்வதேச சுற்றுலாவிற்கு இன்னும் சிறிது காலம் ஆகலாம், எப்போது என்று என்னால் சரியாக கூற முடியாது என்றாலும் தற்போதைய சூழ்நிலையில் ஒவ்வொரு நாட்டிற்கும் சவாலாக இருக்கும் பாதுகாப்பையும் பொருளாதார சமநிலையின் அவசியத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த சமயத்தில் நாங்கள் படிப்படியாக தொடங்குகிறோம்.

முக்கியமாக தாய்லாந்தில் பணிபுரிபவர்களுக்காகவோ அல்லது மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்களுக்காகவோ வெளிநாட்டினர் வருவதற்கு நாங்கள் தொடங்கினோம். தாய்லாந்து சுற்றுலா ஒரு பெரிய இழப்பை சந்தித்துள்ளது, என்று சிறிசும்பன் சிறப்பு நேர்காணலில் ஸ்மிதா ஷர்மாவிடம் கூறினார்.

உலகளாவிய சுற்றுலாவின் மறுமலர்ச்சிக்கு முக்கியமாக சர்வதேச பார்வையாளர்களின் நம்பகத்தன்மையையும் நம்பிக்கையையும் அடிக்கோடிட்டுக் காட்டிய அவர், மக்கள் ‘பணத்திற்கான மதிப்பு’ கிடைப்பதாக இருந்தால் அதிக செலவுகளுடன் பயணிக்கத் தயங்க மாட்டார்கள் என்று அவர் நம்புகிறார். “ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு ஹோட்டலும், ரிசார்ட்டும் தற்போது சரியான இயக்க நடைமுறைகளைச் (SOP) செய்ய வேண்டும். தேவை மற்றும் வழங்கல் ஆகியவற்றை நாம் சமநிலைப்படுத்த வேண்டும். நீங்கள் விலைகளை அதிகரிக்க வேண்டும் என்றால், அதற்கான காரணத்தை உங்கள் வாடிக்கையாளர் புரிந்துகொள்வதை உறுதி செய்ய வேண்டும். வாடிக்கையாளர் தனது பணத்துக்கு மதிப்புள்ளது என்று நினைக்கும் வரை, அவர்கள் அந்த சுற்றுலாவிற்கு பணம் கொடுக்க தயாராக இருப்பார்கள்” என்று தாய்லாந்து சுற்றுலா அதிகாரி கூறினார்.

இதையும் படிங்க: எதிரிகளை அச்சுறுத்தும் புதிய ஆயுதம் ரஃபேல்!

ABOUT THE AUTHOR

...view details