தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல்: தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் வாய்ப்பில்லை - BJP national president JP Nadda

பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், அவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர்கூட இடம்பெறவில்லை.

BJP
BJP

By

Published : Sep 26, 2020, 5:02 PM IST

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகளின் புதிய பட்டியலை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தற்போது வெளியிட்டுள்ளார். சுமார் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் இடம் கிடைக்கவில்லை. முன்னதாக பாஜக தேசியச் செயலாளர் பதவியில் ஹெச். ராஜா இருந்த நிலையில், புதிய பட்டியலில் அவரது பெயரும் இடம்பெறவில்லை.

புதிய பட்டியல்

அதேவேளை பாஜக பலம் குறைவாக உள்ள கேரளா, ஆந்திரப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்த நபர்களுக்குப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கேரளாவைச் சேர்ந்த அப்துல்லா குட்டிக்கு தேசிய துணைத் தலைவர் பதவியும், ஆந்திராவைச் சேர்ந்த புரந்தரேஸ்வரிக்கு தேசிய பொதுச்செயலாளர் பதவியும், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த நரேந்திர சிங்குக்கு தேசிய செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய பட்டியல்

புதிய தலைவர் முருகன் தலைமையில் தமிழ்நாடு பாஜக தற்போது பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுவரும் நிலையில், ஹெச். ராஜா பதவி பறிப்பு, தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு கல்தா என்பது முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க:நிலுவையில் 400-க்கும் மேற்பட்ட அரசியல் சாசன வழக்குகள்

ABOUT THE AUTHOR

...view details