மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி தானாகவே கவிழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் பாஜக இருப்பதாகவும், அக்கட்சியினர் குதிரைபேரத்தில் ஈடுபட்டு காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கிவிட்டனர் என்றும் காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
ஏனெனில் அம்மாநிலத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜோதிராதித்ய சிந்தியா உள்பட 22 பேர் ராஜினாமா செய்துவிட்டனர். அவர்களில் ஆறு பேர் அமைச்சர்கள் ஆவார்கள். தற்போது இருதரப்பினரும் (காங்கிரஸ், பாஜக) தங்களது சட்டப்பேவரை உறுப்பினர்களை உயர்தர சொகுசு விடுதிகளில் தங்கவைத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள சிவசேனா கட்சியின் மூத்தத் தலைவர் எம்.பி. சஞ்சய் ராவத், பாஜகவின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க முயற்சித்து பாஜக தோல்வியைத் தழுவியது. அத்தகைய நடவடிக்கைகள் இங்கு வெற்றி பெறாது.