புதுச்சேரி: கரோனா சிறப்பு மருத்துவமனையில் எந்த விதமான சுகாதார முறைகளும் பின்பற்றப்படவில்லை என் புகார் எழுந்துள்ளது.
புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள அரசு மருத்துவமனை தனி கட்டடத்தில் கரோனா மருத்துவமனை 70 நாட்களாய் செயல்படுகிறது. இப்பகுதியில் சுகாதாரமில்லை, பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடை இல்லை என பல புகார்கள் வந்தன.
இதனை உண்மையாக்கும் வகையில் குடிநீர் கேன்களுக்கு அருகே மருத்துவ கழிவுகள் கிடக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. மேலும் படுக்கைகளை கிருமி நாசினி போட்டு துடைக்காமல், அடுத்த நோயாளியை படுக்க வைப்பது, குடிநீர் கேன்களுக்கு அருகே நோயாளிகளின் கழிவு துணிகள் வைப்பது என சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது.
சுகாதாரமற்று செயல்படும் அரசு சிறப்பு கரோனா மருத்துவமனை! புதிய மற்றும் பழைய நோயாளிகளை ஒரே இடத்தில் வைப்பது, கரோனா மருத்துவமனையில் கிருமி நாசினி பற்றாக்குறை, பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடையில்லை என அனைத்தும் வீடியோவாக எடுத்து புதிய நோயாளிகள் அனுப்பியுள்ளனர்.