தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அபுதாபியில் பாஸ்போர்ட் சேவைகள் தொடக்கம்!

அபுதாபி: பி.எல்.எஸ். சர்வதேச மையங்களில் சமர்ப்பிக்க வேண்டிய பாஸ்போர்ட் புதுப்பித்தல், விண்ணப்பங்கள் மீதான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் ஜூலை 15ஆம் தேதி முதல் நீக்குவதாக அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.

no-restrictions-on-indian-passport-renewal-applications-in-abu-dhabi-from-july-15
no-restrictions-on-indian-passport-renewal-applications-in-abu-dhabi-from-july-15

By

Published : Jul 9, 2020, 2:42 PM IST

கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்தியா உள்ளிட்ட நாடுகள் சர்வதேச விமான சேவைகளை ரத்து செய்துள்ளன. பாஸ்போர்ட் சேவைகளையும் நிறுத்திவைத்துள்ளன.

கடந்த மாதம், இந்திய விசா, பாஸ்போர்ட் விண்ணப்ப சேவைகளை வழங்கும் அவுட்சோர்ஸ் நிறுவனமான பி.எல்.எஸ். இன்டர்நேஷனல், தன்னுடைய அனைத்துச் சேவை மையங்களிலும் ஆன்லைன் மூலம் முன்பதிவைத் தொடங்கியது. இந்நிலையில், பி.எல்.எஸ். சர்வதேச மையங்களில் சமர்ப்பிக்க வேண்டிய பாஸ்போர்ட் புதுப்பித்தல், விண்ணப்பங்கள் மீதான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் ஜூலை 15ஆம் தேதி முதல் நீக்குவதாக அபுதாபியிலுள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அபுதாபியிலுள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”ஜூன் 21ஆம் தேதியன்று ஐக்கிய அரபு அமீரக அலுவலர்கள், இந்திய தூதரக அலுவலர்கள் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு மேற்குறிப்பிட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பி.எல்.எஸ். இன்டர்நேஷனல் மையங்களில் வரும் 15ஆம் தேதி முதல் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் புதுப்பித்தல் சேவையைப் பெறலாம்.

பாஸ்போர்ட் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும்போது, மூத்த குடிமக்கள், 12 வயதுக்குள்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் ஆகியோர் கரோனா பாதிப்பைக் கருத்தில்கொண்டு விண்ணப்பிக்கலாம். அனைத்து விண்ணப்பதாரர்களும் உள்ளூர் விதிகள் மற்றும் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details