தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு பிகாரில் இடமில்லை - நிதீஸ்குமார் உறுதி - சட்டபேரவையில் நிதீஸ்குமார்

பாட்னா: பிகாரில் தேசிய குடிமக்கள் பதிவேடு கண்டிப்பாக செயல்படுத்தப்படாது என்று முதலமைச்சர் நிதீஷ்குமார் பிகார் சட்டப்பேரவையில் உறுதியளித்துள்ளார்.

Nitish Kumar
Nitish Kumar

By

Published : Jan 14, 2020, 8:44 AM IST

பிகார் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை செயல்படுத்துவது குறித்து எந்தக் கேள்வியும் இல்லை என்று கூறிய அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், பிரதமர் நரேந்திர மோடி இது குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார் என்றார்.

இது குறித்து பிகார் சட்டப்பேரவையில் பேசிய அம்மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார், "பிகாரில் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்த எந்தக் கேள்வியும் இல்லை. அது அஸ்ஸாம் மாநிலத்திற்கு மட்டுமே பொருந்தும். பிரதமர் நரேந்திர மோடியும் இது குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்" என்று கூறினார்.

கடந்தாண்டு டிசம்பர் 22 ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த பேரணியில், "தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுக்க விரிவுபடுத்துவது குறித்து மத்திய அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை.

நான் 2014இல் ஆட்சிக்கு வந்த பிறகு, தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து அரசு விவாதிக்கவில்லை. அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டுமே நாங்கள் அதை மேற்கொண்டோம், அதுவும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினால்தான்" என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.

மேலும், குடியுரிமை திருத்தச் சட்டமும் தேசிய குடிமக்கள் பதிவேடும் பிகார் மாநிலத்தில் செயல்படுத்தப் படாது என்றும் நிதீஷ்குமார் உறுதியளித்தார்.

இதையும் படிங்க: பொருளாதாரம் குறித்து விவாதிக்கும் தைரியம் மோடிக்கு இல்லை - ராகுல் தாக்கு

ABOUT THE AUTHOR

...view details