தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மழைக்கால கூட்டுத்தொடரில் கேள்வி நேரத்திற்கு அனுமதியில்லை - மாநிலங்களவை செயலகம்

டெல்லி: கரோனா அச்சுறுத்தலைக் கருத்தில்கொண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டுத் தொடரில் கேள்வி நேரத்திற்கும், வணிக உறுப்பினர்களுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என மாநிலங்களவை செயலகம் தெரிவித்துள்ளது.

no-question-hour-in-parliaments-monsoon-session
no-question-hour-in-parliaments-monsoon-session

By

Published : Sep 2, 2020, 5:53 PM IST

இது தொடர்பாக மாநிலங்களவை செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கரோனா வைரஸ் தொற்றுக்கிடையே வரும் 14ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டுத்தொடர் தொடங்கவுள்ளது. இந்தக் கூட்டுத்தொடர் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முடிவடைய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டுத் தொடரில் பூஜ்ய நேரம் மற்றும் பிற நடவடிக்கைகள் அட்டவணைப்படி நடைபெறும். ஆனால், கரோனா வைரஸ் அச்சுறுத்தலைக் கருத்தில்கொண்டு கேள்வி நேரம் நடைபெறாது.

தொற்று நோயைக் கருத்தில் கொண்டு மாநிலங்களவை அமர்வு முதல் பாதியில், அதாவது காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மக்களவை பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடைபெறும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தினமும் நான்கு மணி நேரம் செயல்படும்.

இந்தத் தொடரின் போது, பின்பற்ற வேண்டிய கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்களவை சபாநாயகரும், மாநிலங்களவைத் தலைவரும் முன்னதாகவே அலுவலர்களுடன் ஆலோசித்துவிட்டு வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஐந்து மாதங்களில் நிறைவேற்றப்பட்ட 11 உத்தரவுகள் மற்றும் அனுமதிகள் குறித்தவை கூட்ட நிகழ்ச்சி நிரலில் உள்ளன. காங்கிரஸ் விவசாயிகளுக்காக மத்திய அரசு அறிவித்துள்ள 'ஒரே நாடு, ஒரே சந்தைத் திட்டம்' குறித்து காங்கிரஸ் சில கருத்துகளை முன்வைக்கவுள்ளதாகத் தெரிகிறது.

மேலும், மாநிலங்களவைத் துணைத் தலைவருக்கான தேர்தலும் முதல் நாள் சபையின் நிகழ்ச்சி நிரலில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான செப்டம்பர் 14ஆம் தேதி, மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு ஐக்கிய ஜனதா தள நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிவன்ஷ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது.

ABOUT THE AUTHOR

...view details