உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரண்டு நாள் பயணமாக கவுதம் புத்தர் நகருக்கு இன்று வந்துள்ளார். செக்டார் 108இல் இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆணையர் அலுவலகத்தை திறந்துவைத்தார். அதைத்தொடர்ந்து நாளை மருத்துவ கல்லூரியையும், மாவட்ட மருத்துவமனையையும், மூன்று நடைமேடைகளையும் அவர் திறந்து வைக்கவுள்ளார்.
இதுமட்டுமின்றி ரூ. 1,369 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டவுள்ளார். இந்நிலையில், முதலமைச்சரின் வருகையை முன்னிட்டுக் கடும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை கிரேட்டர் நொய்டா காவல் துறையினர் விதித்துள்ளனர்.