கரேரா அங்கன்வாடி மையத்தில் கழிவறையில் சமைத்தது குறித்த புகாருக்கு பதிலளித்த மத்திய பிரதேச அமைச்சர் இமர்த்தி தேவி, தற்காலங்கலில் உருவாக்கப்படும் நாகரிக வீடுகளில் கழிவறைகள் இணைந்தே கட்டப்படுகின்றன. இதனால் அந்த வீடுகளில் சமைக்கப்படும் உணவுப் பொருட்களை நாம் உண்ணாமல் இருக்கிறோமா?
'கழிவறையில் சமைப்பது தவறல்ல' - அமைச்சர் இமர்த்தி தேவி - கரேரா
போபால்: கரேராவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு கழிவறையில் உணவு சமைத்தது குறித்த புகாருக்கு கழிவறையில் சமைப்பது ஒன்றும் தவறல்ல என அமைச்சர் இமார்த்திதேவி பதிலளித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் நாம் அனைவருமே கழிவறைகளில் உபயோகிக்கும் பாத்திரங்களை பொதுவான பயன்பாட்டிற்கும் உபயோகித்து வருகிறோம். அதை நாம் தவறாக எண்ணுவதில்லையே எனவும் கூறியுள்ளார். மேலும், கரேரா அங்கன்வாடி மைய புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறதென்றார்.
மாவட்ட பெண்கள், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் தேவேந்திர சுந்திரயால் இந்த புகார் குறித்து கூறுகையில், கரேரா அங்கன்வாடி மையத்தின் கழிவறைகளை பராமரிக்க நிறுவப்பட்ட தன்னாட்சி நிறுவனம், அங்கன்வாடி மையத்தின் கழிவறையினை குழந்தைகளுக்கான உணவுப்பொருள் தயாரிக்க பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து, அங்கன்வாடி ஊழியர்கள், மேற்பார்வையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறினார்.