ஜார்க்கண்டில் உள்ள பிஷ்ராம்பூர் சட்டசபைத் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் இவ்வாறு கூறினார். மேலும் அவர் தனது உரையில், “பிரான்சில் இருந்து நாடு கையகப்படுத்திய ரஃபேல் போர் விமானங்கள் எல்லையில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும். அயோத்தியில் ஒரு பெரிய ராமர் கோயில் கட்டப்படும். உலகில் எந்த சக்தியும் அது நடப்பதைத் தடுக்க முடியாது. கோயில் கட்டுமானத்திற்கான தடை உச்ச நீதிமன்றத்தால் அகற்றப்பட்டுள்ளது.
1952ஆம் ஆண்டில், டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி (பாஜகவின் முன்னோடி, பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனர்) இரண்டு அரசியலமைப்புகள், இரண்டு பிரதமர்கள் மற்றும் இரண்டு வாக்காளர்கள் இருக்க முடியாது என்று கூறியிருந்தார். நாங்கள் அவருடைய கனவை நிறைவேற்றி உள்ளோம். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளோம். மக்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி நடந்தும் வருகிறோம்” என்றார்.