தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'வேளாண் சட்டங்களை யாரும் எதிர்க்கவில்லை' - மத்திய அமைச்சர் - வேளாண் மசோதா 2020

'வேளாண் மற்றும் தொழிலாளர் சட்டங்களில் சீர்த்திருத்தம் செய்வது பற்றி நீண்டகாலமாகப் பேசிவருகிறோம். ஆனால் 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகளாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இதற்காக எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை' என மத்திய அமைச்சர் கங்வார் தெரிவித்தார்.

Gangwar
Gangwar

By

Published : Oct 7, 2020, 12:10 PM IST

கோட்டா: புதிய வேளாண் சட்டங்கள், தொழிலாளர் சீர்த்திருத்த அம்சங்களை உண்மையாக யாரும் எதிர்க்கவில்லை, மக்களிடையே குழப்பம் நிலவுகிறது என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்கவார் கூறியுள்ளார்.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் தந்தை ஸ்ரீகிருஷ்ணா பிர்லா கடந்த வாரம் காலமானார். இந்நிலையில், அவருக்கு மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் மரியாதை செலுத்தினார்.

பின்னர், ஈடிவி பாரத்திடம் பேசிய அமைச்சர் கங்கவார், "புதிதாக நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. வேளாண் மற்றும் தொழிலாளர் சட்டங்களில் சீர்த்திருத்தம் செய்வது பற்றி நீண்டகாலமாகப் பேசிவருகிறோம்.

ஆனால் 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகளாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இதற்காக எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

சீர்த்திருத்தப்பட்ட வேளாண் மற்றும் தொழிலாளர் சட்டங்களை நிறைவேற்றுவதற்காக நாட்டு மக்கள் அளித்த பரிந்துரைகளில் 74 விழுக்காட்டை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.

அதாவது, மக்களிடமிருந்து பெற்ற 233 பரிந்துரைகளில் 74 விழுக்காட்டை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details