தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'அஸ்ஸாம் மக்களின் உரிமைகளை யாராலும் பறிக்க முடியாது' - அஸ்ஸாம் முதலமைச்சர் - அஸ்ஸாம் மக்களின் உரிமைகளை யாராலும் பறிக்க முடியாது

கவுகாத்தி: அஸ்ஸாம் மக்களின் உரிமைகளை யாராலும் பறிக்க முடியாது என, அம்மாநில முதலமைச்சர் சர்பானந்த சோனாவால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

CM Sonowal
CM Sonowal

By

Published : Dec 20, 2019, 1:57 PM IST

இது தொடர்பாக அஸ்ஸாம் தலை நகரம் கவுகாத்தியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், அஸ்ஸாம் மக்களின் உரிமைகளை யாராலும் பறிக்க முடியாது எனவும்; குடியுரிமை திருத்தச் சட்டத்தால் அஸ்ஸாம் மாநிலம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என தான் உறுதியளிப்பதாகவும் தெரிவித்தார்.

CM Sonowal

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பல்வேறு வதந்திகள் பரப்பப்படுவதாக குற்றம்சாட்டிய சோனாவால், தனிப்பட்ட முறையில் போராடுபவர்களையும், குடியரசையும் மதிப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், இந்தச் சட்டத்தால் தமது அடையாளம், மொழிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றார்.

CM Sonowal

தொடர்ந்து பேசிய அவர், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பின், நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் தீவிரமடைந்துள்ளதாகவும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து இந்து, கிறிஸ்டியன், புத்தா உள்ளிட்ட மதங்களைச் சேர்ந்தவர்கள் அகதிகளாக இந்தியாவில் குடியேறியவர்களுக்கு இந்தச் சட்டத் திருத்தம் வழிவகை செய்வதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் பள்ளி வளாகத்தைச் சுத்தம் செய்ய அறிவுரை!

ABOUT THE AUTHOR

...view details