2019 மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. அதேபோல் உத்தரப் பிரதேச மாநிலத்திலும் யோகி ஆதித்தியநாத் தலைமையிலான பாஜக ஆட்சியே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உ.பி மாநிலத்தில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அம்மாநில துணை முதலமைச்சரான கேஷவ் பிரசாத் மவுரியா தொண்டர்களிடையே பேசினார்.
'மத்தியிலும், உ.பியிலும் 50 வருஷத்துக்கு நாங்கதான்!' - சூளுரைக்கும் உ.பி துணை முதல்வர் - அமித் ஷா
லக்னோ: மத்தியில் அமைந்துள்ள பாஜக அரசை 50 ஆண்டுகளுக்கு யாரும் வீழ்த்த முடியாது என உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர் கேஷவ் பிரசாத் மவுரியா தெரிவித்துள்ளார்.
அப்போது அவர், அடுத்த 50 ஆண்டுகளுக்கு மத்தியிலும் உத்தரப் பிரதேசத்திலும் தங்களை யாரும் வீழ்த்த முடியாது என சூளுரைத்துள்ளார். ராகுல் தலைமையிலான காங்கிரஸ், அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி, மாயவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி பாஜகவை நெருங்கக்கூடிய தூரத்தில் கூட இல்லை என்ற பேசினார். மேலும் உத்தரப் பிரதேசத்தில் வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் கடந்த முறைபோலவே பெரும்பான்மையுடன் வெற்றி பெறத் தொண்டர்கள் உழைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தேர்தலுக்கு முன்பாக பாஜக தலைவரும், தற்போதைய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவும் 50 வருட ஆட்சி கருத்தைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.