தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குற்றம் நடைபெறாத நகரம் என உத்ரவாதம் அளிக்க முடியாது: அமைச்சர்.! - குற்றம் இல்லாத நகரம்

பாரபங்கி (உபி): குற்றம் நடைபெறாத நகரம் என யாரும் உத்ரவாதம் அளிக்க முடியாது என உத்தரப் பிரதேச அமைச்சர் ரன்வேந்திர பிரதாப் சிங் கூறியுள்ளார்.

No one can guarantee crime-free society: UP minister on rapes
No one can guarantee crime-free society: UP minister on rapes

By

Published : Dec 6, 2019, 10:19 AM IST

உத்தரப் பிரதேச அமைச்சர் ரன்வேந்திர பிரதாப் சிங், பாரபங்கியில் செய்தியாளர்கச் சந்தித்தார். அப்போது அவர் உன்னோவ் பாலியல் பலாத்காரம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.
அவர் பேசும்போது, “நான் நினைக்கிறேன், 100 சதவீதம் குற்றம் நடைபெறாத நகரம் என்ற உத்ரவாதத்தை பகவான் ஸ்ரீ ராமனாலும் கொடுக்க முடியாது. ஆனாலும் குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுப்பதை உறுதியளிக்கலாம். ஒன்றை உறுதியாக கூறிக்கொள்கிறேன். யாராவது குற்றத்தில் ஈடுபட்டால், அவர்களுக்கு நிச்சயம் சிறை உண்டு.” என்றார்.

அவரிடம் செய்தியாளர்கள், உன்னோவ்பாலியல் வன்புணர்வுக்குப்பின், தீக்குளித்த பெண் வழக்கு குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர், “அப்பெண்ணுக்கு லக்னோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர் உயர் சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனைக்கு மாற்றப்படுவார் என்றார்.

உத்தரப் பிரதேச அமைச்சர் பேச்சு
உத்தரப் பிரதேசத்தில் கொடூர குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அம்மாநில முதலமைச்சர் யோகி ஆத்தியநாத் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஹைதராபாத் திஷா வழக்கு: குற்றவாளிகள் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்

ABOUT THE AUTHOR

...view details