தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

லட்சத்தைத் தாண்டிய படித்த சிறைக்கைதிகளின் எண்ணிக்கை - என்.சி.ஆர்.பி அறிக்கை!

டெல்லி: நாடு முழுவதும் உள்ள படித்த சிறைக் கைதிகளின் எண்ணிக்கை 2018ஆம் ஆண்டை விட 2019இல் 5 ஆயிரத்து 614ஆக அதிகரித்து 4.78 லட்சமாக உயர்ந்துள்ளதாக தேசிய குற்றப் பதிவு பணியகம் (NCRB - National Crime Records Bureau) தெரிவித்துள்ளது.

ail
jail

By

Published : Sep 2, 2020, 10:49 PM IST

நாடு முழுவதும் உள்ள சிறைக் கைதிகளில் எத்தனை பேர் படித்தவர்கள் என்றப் பட்டியலை சமீபத்தில் தேசிய குற்றப் பதிவு பணியகம் (National Crime Records Bureau) வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2019 டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி 4,78,600 கைதிகளில் சுமார் 1,98,872 கைதிகள் பத்தாம் வகுப்பிற்குக் கீழ் படித்தவர்களாக இருந்தனர். 1,32,729 கைதிகள் படிப்பறிவு இல்லாமல் இருந்தனர். இதுமட்டுமின்றி பத்தாம் வகுப்பிற்கு மேல் பட்டப்படிப்பிற்குக் கீழ் உள்ள பட்டியலில் 1,03,036 கைதிகள் உள்ளனர். 2018ஆம் ஆண்டில் மட்டுமே, சிறைக்குப் புதிதாக 1,01,457 படித்த கைதிகள் வந்தனர். ஆனால், 2019இல் சிறைக்கு வந்த படித்த கைதிகளின் எண்ணிக்கை சற்று உயர்ந்து 1,07,071ஆக இருந்தது. சுமார் 5 ஆயிரத்து 614 பேர் அதிகளவில் வந்துள்ளனர். தண்டனை பெற்ற மொத்த கைதிகளில் கல்வியறிவு பெற்றவர்தள் 27.7 % உள்ளனர்.

மேலும், என்.சி.ஆர்.பி தரவுகளின்படி, 2019ஆம் ஆண்டில் மொத்தம் 1,14,262 கைதிகள் நாட்டில் கல்வி கற்றுள்ளனர். அதில் 47,860 கைதிகள் தொடக்க கல்வியும், 44,438 கைதிகளுக்கு அடிப்படைக் கல்வியும், 11,917 கைதிகளுக்கு உயர் கல்வியும், 10,047 கைதிகளுக்கு கணினித் துறையில் கல்வியும் கற்பிக்கப்பட்டுள்ளன. மாநிலங்களைப் பொறுத்தவரை கைதிகளுக்கு கணினி மற்றும் தொடக்கக் கல்வியை வழங்குவதில் தெலங்கானா மாநிலம் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details