இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. மக்கள் பொது இடங்களில் தேவையின்றி ஒன்றுகூட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு 370ஆக உயர்வு!
டெல்லி: இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 370 ஆக உயர்ந்துள்ளது.
இருப்பினும் வைரஸ் தொற்று அதிகரித்துவருகிறது. இதுவரை 370 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மார்ச் 22ஆம் தேதி காலை 10 மணிவரை 16,999 பேருக்கு வைரஸ் தொற்று இருக்கிறதா என்பது குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 370 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை இந்த வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: அஸ்ஸாமில் நான்கரை வயது குழந்தைக்கு கரோனா உறுதி