இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. பல்வேறு மாநிலங்களிலும் மக்கள் நடமாட்டத்தை குறைக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேசிய தலைநகரில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 5 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கடந்த 24 மணி நேரத்தில் தேசிய தலைநகரில் புதியதாக யாருக்கும் கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை. இதுவரை சிகிச்சை பெற்றுவந்த ஐந்து பேர் வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும், நாம் இப்போது மகிழ்ச்சியாக இருக்கக்கூடாது" என பதிவிட்டுள்ளார்.