தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பணமதிப்பிழப்பு நடவடிக்கை 2.0 ? - மத்திய அமைச்சர் பதில் - Anurag Thakur on Rs 2000 note

டெல்லி: 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெறுவது குறித்து கவலைப்பட தேவையில்லை என மத்திய இணையமைச்சர் அனுராக் தாகூர் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

Anurag
Anurag

By

Published : Dec 11, 2019, 7:45 AM IST

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படும் என தகவல் வெளியாகியிருந்த நிலையில், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த விஷம்பர் பிரசாத் நிஷாத், 'புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளால் கருப்பு பணம் அதிகரித்துள்ளது. இதனால், 2000 ரூபாய் நோட்டுகளுக்கு பதில் 1000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் என்ற தவறான கருத்து மக்களிடையே நிலவிவருகிறது' என மாநிலங்களவையில் தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் மாநிலங்களவையில், 'பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த கவலை மீண்டும் எழுந்துள்ளது. ஆனால், அதுபற்றி கவலைப்பட வேண்டாம் என நான் நினைக்கிறேன். கருப்பு பண ஒழிப்பு, இடதுசாரி தீவிரவாதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் நிதியளிக்கும் ஆதாரத்தை களைவது, ஒழுங்குசாரா பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்துவது, வரி விதிப்பை அதிகரித்து வேலைவாய்ப்பை உருவாக்குவது, பணமில்லா பரிவர்த்தன முறையை ஊக்குவிப்பது ஆகியவைக்காகதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நவம்பர் 4ஆம் தேதி 2016ஆம் ஆண்டின்படி 17,741.87 பில்லியன் ரூபாய் பயன்பாட்டில் இருந்தது. டிசம்பர் 2ஆம் தேதி 2019ஆம் ஆண்டின்படி, இது 22,356.48 பில்லியன் ரூபாயாக உயர்ந்தது. அக்டோபர் 2014ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 2016ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், என்.ஐ.சி. எனப்படும் நோட்டுகளின் பயன்பாடு சராசரியாக 14.51 விழுக்காடு வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதன்படி, டிசம்பர் 2ஆம் தேதி 2019ஆம் ஆண்டு, 25,402.53 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் பயன்பாட்டில் இருந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. இதன்மூலம், கருப்பு பணம் ஒழிந்திருப்பது தெரியவந்துள்ளது' என விளக்கமளித்தார்.

இதையும் படிங்க: கர்ப்பமாக்கிய காதலன் கரம் பிடிக்க மறுப்பு: மன உளைச்சலில் தீ வைத்துக்கொண்ட சிறுமி!

ABOUT THE AUTHOR

...view details