தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அலுவலகத்தை அவசியமின்றி பூட்டவேண்டாம்: கரோனா வழிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு - கரோனா வழிமுறைகள்

அலுவலகங்களில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்த முழு தகவல்கள் அடங்கிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Workplace guidelines
Workplace guidelines

By

Published : May 19, 2020, 9:30 PM IST

டெல்லி: அலுவலகங்களுக்கான புதிய கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் 4ஆம் கட்டமாக மே 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பச்சை, ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அலுவலகங்களுக்கான கரோனா தடுப்பு பற்றிய பாதுகாப்பு வழிகாட்டுதலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில், ஒரு அலுவலகத்தில் ஒன்றிரண்டு கரோனா பாதிப்பு இருந்தால் முழுமையாக அலுவலகத்தை மூட வேண்டியதில்லை, அலுவலகங்களில் கிருமி நாசினி தெளித்துவிட்டு வழக்கமான பணிகளைத் தொடரலாம் போன்ற வழிமுறைகள் இடம்பெற்றுள்ளன.

இந்தியச் சிறுமியைப் பாராட்டிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

கட்டாயமான விதிகள்

  • முடிந்த அளவு நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணியை மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும்
  • அனைத்து நிறுவனங்களிலும் உடற்சூட்டைக் கண்டறியும் சோதனைக் கருவிகள் இருக்க வேண்டும்
  • அனைத்து அலுவலகங்களிலும் கிருமி நாசினிகளை வைக்க வேண்டும்.
  • அதேபோல் குறைந்த அளவில் பணியாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். ஷிப்ட் முறையில் பணியாளர்களை பணிக்கு அழைக்கலாம்.
  • உணவு இடைவேளை ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது. ஒரே நேரத்தில் ஒன்றாக கூடக் கூடாது.
  • பணியாளர்கள் 40-60 நிமிடத்திற்கு ஒருமுறை கை கழுவ வேண்டும்.
  • எல்லோரும் அவசியம் முகக் கவசம் அணிய வேண்டும்.
  • தனிப்பட்ட வகையில் பணியாளர்களின் உடல் நிலையை அடிக்கடி சோதனை செய்ய வேண்டும்.

சிறுகுழந்தைகளுடன் 20 கி.மீ. நடந்தே வந்த பார்வையற்ற பெண் - காப்பகத்தில் சேர்த்த காவல்துறை!

அலுவலகங்களுக்கான தடுப்பு வழிகள்

  • கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் இருந்தால் 48 மணி நேரத்திற்கு அலுவலகத்தை மூட வேண்டும்
  • காய்ச்சல் உள்ளிட்ட உடல்நிலை பிரச்னை இருந்தால் பணிக்கு வரக்கூடாது.
  • கட்டுப்பாட்டு பகுதியில் இருப்பவர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.
  • வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து வரும் அனைவரையும் பரிசோதனை செய்ய வேண்டும்.
  • சுவாசக் கோளாறு இருக்கக் கூடிய அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
  • காய்ச்சல் உள்ளவர்கள் உடனே மருத்துவமனைக்குச் சென்று சோதனை செய்ய வேண்டும். கரோனா உறுதியானால் உடனே அலுவலகத்திடம் அறிவிக்க வேண்டும்
  • அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை தான் செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

செல்போனில் பப்ஜி கேம் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு!

கரோனா நோய்க் கிருமித் தொற்று அறிகுறி ஏற்பட்டால் என்ன செய்வது

  • அலுவலகத்தில் ஒருவருக்கு கரோனா அறிகுறி தென்பட்டால் அவரை தனிமைப்படுத்த வேண்டும்.
  • அவருக்கு முகக் கவசம் கொடுத்து தனியறையில் வைக்க வேண்டும்.
  • சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
  • 1075 என்ற மத்திய அரசின் இலவச உதவி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். அதன்பின் அவரின் உடல்நிலையை பொறுத்து முடிவு எடுக்கலாம்

அலுவலகத்தை மூடுதல்

  • அலுவலகத்தில் ஒருவருக்கு மட்டும் கரோனா ஏற்பட்டால் மொத்தமாக அலுவலகத்தை மூட வேண்டியது இல்லை.
  • அலுவலகம் முழுக்க கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும்.
  • ஆனால் அலுவலகத்தில் நிறைய பேருக்கு கரோனா ஏற்பட்டால் உடனடியாக அலுவலகத்தை மூட வேண்டும்.
  • கரோனா ஏற்படாத மற்ற நபர்களை வீட்டில் தனிமைப்படுத்த வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details