இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராம்தேவ், "கொரோனா வைரஸை நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால் வைரஸ் பரவாமலிருக்க கண்டிப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.
பொது இடங்களில் இருக்கும்போதும், பேருந்து, தொடர் வண்டி, விமானங்களுக்குச் செல்லும்போதும் கண்டிப்பாகச் சானிடைசரை பயன்படுத்த வேண்டும். மற்ற நபர்களிடமிருந்து 4, 5 மீட்டர் தள்ளியே இருங்கள். முகக் கவசத்தையும் அணியுங்கள்.
யோகா செய்யுங்கள். எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, ஆஸ்துமா, இதய நோய், சக்சரை நோய்களைக் குணப்படுத்த இயற்கையான வாழ்க்கை வாழ வேண்டும். இந்த வழிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு கோவிட்-19 வைரஸ் வருவதற்கான வாய்ப்பு அதிகம்" என்றார்.
சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கோவிட்-19 (கொரோனா) வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 84 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். நிலமையைச் சமாளிக்க மத்திய அரசு கோவிட்-19 வைரஸை தேசியப் பேரிடராக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : அசைவம், குளிர்ந்த, வெப்பமான சூழலுக்கும் கொரோனாவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை - எய்ம்ஸ் இயக்குநர்