கரோனா தொற்று பரவல் குறித்து உலகம் முழுவதிலும் உள்ள 239 அறிவியல் ஆய்வாளர்கள் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு உலக சுகாதார மையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், கரோனா தொற்று காற்றில் பரவும் என்றும் ஒருவர் தும்மும்போதும் இருமும்போதும் அதிலிருந்துவரும் பெரிய எச்சில் துளிகளை காட்டிலும் சிறிய துளிகள் காற்றில் அதிக நேரம் இருக்கும் எனவும் மேலும் பெரிய எச்சில் துளிகள் விரைவில் கீழே விழுந்துவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தை ஏற்றுக் கொண்ட உலக சுகாதார மையம், தகுந்த இடைவெளி, கூட்டமான இடங்கள், காற்றுப் புகா இடங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர் மூலம் வரும் இருமல், தும்மலின் துளிகள் காற்றில் பரவ அதிக வாய்ப்பு உள்ளது.