தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பல்கர் கும்பல் வன்முறை: இஸ்லாமியர்கள் யாரும் கைதுசெய்யப்படவில்லை!

மும்பை: பல்கர் கும்பல் வன்முறை தொடர்பாக இதுவரை இஸ்லாமியர்கள் யாரும் கைதுசெய்யப்படவில்லை என்று மகாராஷ்டிரா அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

Deshmukh
Deshmukh

By

Published : Apr 22, 2020, 1:20 PM IST

மகாராஷ்டிரா மாநிலத்தின் கடலோர மாவட்டமான பல்கரில் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி காரில் சென்றுகொண்டிருந்த இரண்டு சாதுக்கள் உள்பட மூன்று நபர்களைக் குழந்தை கடத்தல்காரர்கள் என்று நினைத்து அப்பகுதி மக்கள் அடித்துக் கொலைசெய்தனர். இது தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இஸ்லாமியர்கள் யாரும் கைதுசெய்யப்படவில்லை என்று மகாராஷ்டிர உள் துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 101 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதை வைத்து சிலர் வகுப்புவாத அரசியலில் ஈடுபடுவது தீவினையானது.

அரசியல் செய்ய இது நேரமல்ல. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் நாம் ஒருங்கிணைந்து போராட வேண்டும், அதுதான் இப்போது நமக்கு முக்கியம். இந்தச் சம்பவத்தில் இதுவரை கைதுசெய்யப்பட்டவர்களில் யாரும் இஸ்லாமியர் இல்லை" என்று கூறியுள்ளார்.

பல்கரில் நடைபெற்ற இந்தக் கும்பல் வன்முறை தொடர்பாக விசாரிக்க உயர்மட்டக் குழுவை மகாராஷ்டிர மாநில அரசு அமைத்துள்ளது.

இதையும் படிங்க: பல்கர் கும்பல் வன்முறை: களத்தில் உள்துறை அமைச்சகம்

ABOUT THE AUTHOR

...view details