தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பள்ளிகள் மூடல்; மதிய உணவு கட்: குப்பை சேகரித்து உணவிற்காகக் கையேந்தும் குழந்தைகள் - கரோனா அச்சுறுத்தல்

பாகல்பூர்: கரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு, மதிய உணவு கிடைக்காததால் மாவட்டத்தில் உள்ள ஏழைக் குழந்தைகள் குப்பைகளைச் சேகரித்து கொடுத்து உணவிற்காகக் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பள்ளிகள் மூடல்: மதிய உணவு கிடைக்காததால் , உணவிற்கு கையேந்தும் குழந்தைகள்
பள்ளிகள் மூடல்: மதிய உணவு கிடைக்காததால் , உணவிற்கு கையேந்தும் குழந்தைகள்

By

Published : Jul 9, 2020, 6:27 PM IST

பிகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்திலுள்ள முஷாரி டோலாவில் வசிக்கும் குழந்தைகள், உணவின்றி குப்பைகளைச் சேகரித்து கொடுத்து, உணவிற்காக பிறரிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக வேலையிழந்த, குழந்தைகளின் பெற்றோர்களால் ஒரு வேலை உணவைக்கூட ஏற்பாடு செய்ய முடிய நிலை ஏற்பட்டுள்ளது.

பாகல்பூர் மாவட்டத்தில் மதிய உணவுத் திட்டத்திற்கு சுமார் 5.25 லட்சம் குழந்தைகளின் பெயர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களில், பெரும்பாலான குழந்தைகள் ஒவ்வொரு நாளும் உணவுக்காகப் பள்ளிக்குச் செல்கிறார்கள். தொற்று நோய் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட பின்னர் சரிவர உணவு கிடைக்காததால், குழந்தைகள் குப்பைகளைச் சேகரிக்கத் தொடங்கியுள்ளனர். அதன்மூலம் அவர்கள் ஒரு நாளைக்கு சுமார் 10 முதல் 20 ரூபாய் சம்பாதிக்கிறார்கள்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ராக்கெட் மன்ஜி கூறியதாவது, "​​குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை, எனவே அவர்கள் பசியைப் போக்க குப்பைகளைச் சேகரித்து கொடுத்து, கையேந்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்" என்று கூறினார். இதுதொடர்பாக பேசிய மாவட்ட நீதிபதி பிரணாப் குமார், ”குழந்தைகளின் பெற்றோர்களின் வங்கிக் கணக்கில் மாநில அரசு மதிய உணவுக்கான பணம் டெபாசிட் செய்யப்பட்டுவருகிறது. 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு 114.21 ரூபாயும், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு 171.17 ரூபாயும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மாநில அரசிற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம்நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2015-16ஆம் ஆண்டு தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி, பிகாரில் 48.3 விழுக்காடு குழந்தைகள் (5 வயதுக்குட்பட்டவர்கள்) குன்றியிருக்கிறார்கள், 43.9 விழுக்காடு குழந்தைகள் எடை குறைந்தவர்கள்/ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள். இது தேசிய சராசரியான 38.4 மற்றும் 35.7 விழுக்காட்டை விட அதிகமாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details