மகாராஷ்டிராவில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், கலந்துகொண்ட பாஜக எம்எல்ஏ சுதீர் முங்கண்டிவார், "ஜோதிராதித்யா சந்தியா போன்ற நபர்கள் மகாராஷ்டிராவில் இருக்க வாய்ப்புள்ளது. உங்கள் எம்எல்ஏக்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்" என்றார்.
இதற்கு பதிலளித்த மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார், "எங்கள் கூட்டணியில் சிந்தியா போன்ற நபர் இல்லை. அவையில் இருக்கும் உங்கள் (பாஜக) எம்எல்ஏக்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கு துரோகம் இழைத்தது நீங்கள். அது உங்கள் தவறு. உங்கள் தவறுக்கு மன்னிப்பு கிடையாது" என்றார்.