ஹைதராபாத்தில் வசித்து வரும் ஜனனி ராவ் (20) என்ற இளம்பெண் ஒருவர் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்றுவருகிறார். கல்லூரியில் படித்துக்கொண்டே, மாலை நேரங்களில் தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் பகுதி நேர வேலை செய்துவருகிறார். இணையதளம் மூலம் இயங்கக்கூடிய ஸ்விகி உணவு விநியோக நிறுவனத்தில் தற்போது பணியாற்றிவருகிறார். இவர் இப்பணியில் சேர்ந்து இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இவரது அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் தனக்கு கிடைக்கும் வருமானத்தை வைத்து பூர்த்தி செய்துகொள்கிறார்.
இதுகுறித்து ஜனனி ராவ் கூறுகையில், ‘இந்த வேலை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. வித்தியாசமான அனுபவத்தை கொடுப்பதால் இந்த வேலையின் மீது எனக்கு ஆர்வம் உள்ளது. ஒவ்வொரு நாளும் நிறைய வாடிக்கையாளர்களைச் சந்திக்கிறேன். அவர்கள் அனைவரும் ஒரு பெண் இந்த பணியில் இருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறுகின்றனர். வேலையில் பெரியது, சிறியது என்பது கிடையாது, எந்த வேலையாக இருந்தாலும் பார்ப்பதற்கு ஏற்றவாறு சம்பளம் கிடைக்கின்றது. பார்க்கும் வேலையை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு, அதனை முழுவதுமாக அனுபவிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.