தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ட்ரம்ப் வருகைக்கு அழைப்பில்லை - காங்கிரஸ் - குலாம் நபி ஆசாத்

டெல்லி: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகைபோது தங்கள் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

trump visit to india
trump visit to india

By

Published : Feb 22, 2020, 12:07 AM IST

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரும் பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியா வரவுள்ளார். இந்த பயணத்தின்போது ட்ரம்ப் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளார்.

ட்ரம்பின் வருகைக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசி காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் ஷர்மா, "இந்திய அரசிடம் இருந்தோ அமெரிக்கா தரப்பிலிருந்தோ இது வரை எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அழைப்பு வரும்பட்சத்தில் அது குறித்து பரிசீலிப்போம்" என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் குலாம் நபி ஆசாத்துக்கு அழைப்பு விடுக்கப்படலாம். இருப்பினும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்பது குறித்து தெளிவான பதில்கள் இல்லை.

இருப்பினும் வெளிநாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் இந்தியா வரும்போது காங்கிரஸ் தலைவர்களைச் சந்திப்பது வழக்கம்.

சமீபத்தில் இந்தியா வந்த இலங்கை அதிபர் ராஜபக்ச, ராகுல் காந்தி மற்றும் மன்மோகன் சிங்கை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த் ஷர்மா, "அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவு தனிப்பட்டதாக இருக்கவேண்டும். அது ரஷ்யா உள்ளிட்ட மற்ற நாடுகளுடனான உறவை பாதிக்ககூடாது. இந்தியாவை அமெரிக்கா பெரியண்ணண் மனோபாவத்தில் நடத்துவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது" என்றார்.

இதையும் படிங்க: அசோக் கெலாட்டுக்கு எதிராக சீறும் பாஜக எம்.எல்.ஏ

ABOUT THE AUTHOR

...view details