கரோனா வைரஸ் நோய் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடலை உடற்கூறாய்வுக்கு உட்படுத்தும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை தொகுத்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கரிம திரவங்கள், சுரப்பு ஆகியவற்றின் காரணமாக நோய் பரவும் அபாயம் அதிகமுள்ளதால் முன்னதாக கடைபிடிக்கப்பட்டுவந்த சில வழிமுறைகளை தவிர்க்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவிட்-19 உயிரிழப்பு: உடற்கூறாய்வின்போது மருத்துவர்களுக்கு எச்சரிக்கை
கரோனா வைரஸ் நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவரின் உடலை உடற்கூறாய்வுக்கு உட்படுத்தும்போது முன்னதாக கடைபிடிக்கப்பட்டுவந்த வழிமுறைகளை தவிர்க்க வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "கரோனா வைரஸ் நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் உடலை உடற்கூறாய்வுக்கு உட்படுத்த வேண்டாம். சிகிச்சை அளிக்கும் மருத்துவரே இறப்புக்கான சான்ழிதழை வழங்கலாம். கரோனா உயிரிழப்பாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுமானால், அதனை மருத்துவர்கள் மருத்துவ சட்ட வழக்குகளாகக் கருதலாம். இம்மாதிரியான சூழ்நிலையில், உடற்கூறாய்வு மேற்கொள்ளலாம்.
இம்மாதிரியான பேரிடர் காலத்தில், விசாரணையில் ஈடுபடும் காவல் துறையினர் உடற்கூறாய்வை மேற்கொள்ளலாமா அல்லது தவிர்க்கலாமா போன்ற முடிவுகளை எடுக்கலாம். எலும்பு, உயிரணு போன்றவற்றை கையாளும்போது நோய் பரவும் அபாயம் அதிகம் உள்ளது. இம்மாதிரியான சூழ்நிலையில், முன்னதாக கடைபிடிக்கப்பட்டுவந்த வழிமுறைகளை தவிர்க்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.