காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டனர். அவர்களை விடுவிக்கக் கோரி, எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துவந்த நிலையில், அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா நேற்று விடுவிக்கப்பட்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, "எந்த ஒரு நபரையும் வீட்டுக் காவலில் அடைக்க வேண்டுமென்ற உள்நோக்கம் எங்களுக்கு இருந்ததில்லை. ஆனால், மாநிலத்தில் சட்ட ஒழுங்கைக் காப்பாற்ற சிலர் வீட்டுக் காவலில் இருந்துதான் ஆக வேண்டும். அனைவரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்.