தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்த இஸ்லாமிய அமைப்பு - குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டு அஞ்ச வேண்டாம்

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டு இஸ்லாமியர்கள் அஞ்ச வேண்டாம் என ஆர்.எஸ்.எஸ். மூத்தத் தலைவர் இந்திரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

CAA
CAA

By

Published : Jan 17, 2020, 9:46 AM IST

முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் என்ற இஸ்லாமியர் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு நெருக்கமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் அமைப்பு இச்சட்டத்திற்கு ஆதரவாக ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. இதில், 200 இஸ்லாமியத் தலைவர்கள் கலந்து கொண்டு, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

அப்போது பேசிய ஆர்.எஸ்.எஸ். மூத்தத் தலைவர் இந்திரேஷ் குமார், "சட்டத்தை பற்றிய ஒழுங்கான புரிதல் இல்லாதவர்கள்தான் அதனை எதிர்க்கிறார்கள். மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள். தேசப் பிரிவினைக்கு யார் காரணம் என்ற விவாதம் நடைபெற்று வந்தாலும் அதனை செயல்படுத்தியது காங்கிரஸ் கட்சிதான்" என்றார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவான மாநாடு

முன்னதாக, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவைக்கு எதிராக கோஷம் எழுப்பிய சிலர் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்த முயன்றனர்.

இதையும் படிங்க: குடியரசு தினவிழாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 5 பயங்கரவாதிகள் கைது

ABOUT THE AUTHOR

...view details