தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ப்ரியங்கா காந்தி வருகை அரசியலில் தாக்கம் ஏற்படுத்தாது- அமைச்சர் உமா பாரதி - priyanga gandhi

சத்திஸ்கர்: பிரியாங்கா காந்தி அரசியலுக்கு வருவதினால் எந்த தாக்கமும் ஏற்படபோவதில்லை என மத்திய அமைச்சர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் உமா பாரதி

By

Published : Apr 17, 2019, 10:45 AM IST

சத்திஸ்கர் மாநிலம், துர்க் பகுதியில் பாஜகவுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்ட மத்திய அமைச்சர் உமா பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, காங்கிரஸ் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள பிரியங்கா காந்தியால் அரசியலிலும் சரி, நாடாளுமன்றத் தேர்தலிலும் சரி எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அவரது கணவரான ராபர்ட் வதோரா மீது பணமோசடி வழக்கு உள்ளது அனைவருக்கும் தெரியும் என விமர்சித்தார்.

மேலும் காங்கிரஸ் பொதுச்செயலாராக இருக்கும் ராகுல்காந்தி கேரள மாநிலம், வயநாடு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அவர் எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது அவரது விருப்பம். ஆனால் ஆரம்பத்தில் இருந்து அமேதி தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்து விட்டு பின்னர் வயநாடு தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்துள்ள்து அவரது தோல்வி பயத்தையே காட்டுகிறது. மேலும் பாஜகவை பொறுத்தவரையில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பலமாகவே இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details