தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'சூயிங் கம்-க்கு தடை விதிக்கும் திட்டமில்லை' - ஹர்ஷவர்தன் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

டெல்லி: சூயிங் கம்-க்கு தடைவிதிப்பது குறித்த திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய சுகாதரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார்.

No idea of banning Chewing Gum - Union health dept. clarified
Chewing Gum banning issue

By

Published : Feb 1, 2020, 8:36 AM IST

Updated : Feb 1, 2020, 9:50 AM IST

கேரள மக்களவை உறுப்பினர் முகம்மது பஷீர், சூயிங் கம் (chewing gum) தடைவிதிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், அதுமாதிரியான திட்டம் ஏதும் இல்லை என்று கூறியிருக்கிறார்.

வணிக வளாகங்கள் தொடங்கி கிராமப்புறங்களிலுள்ள பெட்டிக்கடைகள் வரை தடையின்றி கிடைக்கும் சூயிங் கம்-ஐ, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி வாங்கி சுவைக்கின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் அருகாமையிலுள்ள கடைகளிலிருந்து வாங்கி மாணவர்கள் சூயிங் கம் உண்கின்றனர்.

இவை உடல்நலத்துக்குக் கேடு என்பதால் தடை விதிக்க முடியுமா என்று கேரளாவைச் சேர்ந்த இந்தியன் முஸ்லீம் லீக் மக்களவை உறுப்பினர் இ.டி. முகமது பஷீர் எழுத்துப்பூர்வமாக கேள்வி கேட்டிருந்தார்.

இதற்கு எழுத்து மூலமாக பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், சூயிங் கம்-க்கு தடை விதிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Last Updated : Feb 1, 2020, 9:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details