உத்தரப்பிரதேசம் லக்னோவில் பரா இமாம்பாரா பகுதியில் அசாபி மசூதி உள்ளது. இங்கு ஊரடங்கு காரணமாக தொழுகை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அரசு சில நிபந்தனைகளுடன் வழிபாட்டு தளங்களை திறக்க அனுமதியளித்துள்ளது. ஆனால், அசாபி மசூதி மக்கள் ஒன்றிணைந்து பிரார்த்தனை செய்யும் வெள்ளிக்கிழமை தொழுகையின் தடை தொடரும் என, மஜ்லிஸ் உலேமா-இ-ஹிந்தின்பொதுச் செயலாளர் ஜவ்வத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
லக்னோ அசாபி மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நிறுத்தம் நீட்டிப்பு! - அசாபி மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை தடை நீட்டிப்பு
லக்னோ: அசாபி மசூதியில் (Asafi mosque) மக்கள் ஒன்றிணைந்து பிரார்த்தனை செய்யும் வெள்ளிக்கிழமை தொழுகை நிறுத்தம் நீடிக்கும் என, மஜ்லிஸ் உலேமா-இ-ஹிந்தின் (Majlis-e-Ulama-e-Hind) பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

mosque
அந்த அறிக்கையில், "அரசு வெளியிட்ட வழிமுறைபடி இரண்டு 'நமாஸ்களுக்கு' (namaazis) இடையே ஆறு அடி தூரம் இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பது சிக்கலானது. மக்கள் மசூதிகளில் தனித்தனியாக பிரார்த்தனை செய்து கொள்ளலாம். இச்சமயத்தில் ஜுமா நமாஸ் வழங்கப்படும் என்று நாங்கள் அறிவித்தால், அது குழப்பத்திற்கு வழிவகுக்கும், கூட்டத்தை நிர்வகிப்பது கடினமாக இருக்கும். அதன்படி, கரோனா வைரஸ் தாக்கம் குறையும் வரை வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெறாது " எனக் குறிப்பிட்டுள்ளார்.