குடியரசுத் தலைவர் மாளிகையில் பணிபுரிந்த ஊழியர் ஒருவரின் குடும்ப உறுப்பினர் கரோனா தொற்றால் இறந்தவருடன் தொடர்பில் இருந்தது, முன்னதாக கான்டேக்ட் ட்ரேசிங் மூலம் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்திலிருந்த அந்த நபரின் குடும்பம், அவர்களுடன் தொடர்பிலிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் இருந்த பலரும் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு உள்ள எவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என குடியரசுத் தலைவர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.