தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சனிக்கிழமைகளிலும் ஊரடங்கு உத்தரவு: தகுந்த நேரத்தில் முடிவெடுப்பார் முதலமைச்சர் - அஸ்வத் நாராயணன்

பெங்களூரு: கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக எல்லா சனிக்கிழமைகளிலும் ஊரடங்கு உத்தரவு விதிக்க அரசாங்கம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயணன் தெரிவித்துள்ளார்.

அஸ்வத் நாராயணன்
அஸ்வத் நாராயணன்

By

Published : Jul 11, 2020, 10:07 PM IST

கர்நாடகாவில் அன்லாக் 2.0 இன் கீழ், ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 2 வரை ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இதற்கிடையில், கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வருவதால் சனிக்கிழமைகளிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து துணை முதலமைச்சர் சி.என்.அஸ்வத் நாராயண் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து கூறியதாவது, இப்போதைக்கு சனிக்கிழமைகளில் ஊரடங்கு உத்தரவு இல்லை. ஆனால் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தேவைப்பட்டால் சனிக்கிழமைகளிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்.

இது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார். பல உயர் அலுவலர்களும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சனிக்கிழமைகளிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

எல்லா ஞாயிற்றுக்கிழமையும், முழு ஊரடங்கு உத்தரவு உள்ளது. இருப்பினும், அந்நாட்களில் அத்தியாவசியத் தேவைகளுக்குப் பொது மக்கள் செல்ல அரசாங்கம் அனுமதித்துள்ளது. ஊரடங்கு என்பது தீர்வுகளில் ஒன்றாகும். இதன்மூலம் கரோனா தொற்று பரவலை ஒத்திவைக்க முடியும். ஆனால் ஒழிக்க முடியாது. இந்த ஊரடங்கு மூலம் மக்கள் படும் கஷ்டங்கள் அரசிற்கு தெரிகிறது.
மேலும் பலர் ஊரடங்கு வேண்டாம் என நினைக்கின்றனர். சூழலைப் பொறுத்து முதலமைச்சர் தகுந்த முடிவெடுப்பார் என அவர் கூறினார். கர்நாடக மாநிலத்தில், நேற்றைய (ஜூலை 10) நிலவரப்படி 33 ஆயிரத்து 418 பேருக்கு கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 13 ஆயிரத்து 836 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 543 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details