கடற்கரை நகரமான கோவாவில் ஏழு பேருக்கு கரோனா (கோவிட்19) பெருந்தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கூறுகையில், “கோவாவில் கோவிட்-19 பெருந்தொற்று சமூகப் பரிமாற்றம் இல்லை.
இது 21 நாட்கள் பூட்டுதல் மற்றும் நாம் கடைப்பிடிக்கும் சமூக இடைவெளியால் சாத்தியமானது. இந்தக் கடுமையான பூட்டுதலை தொடர வேண்டும். மேலும் கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஏழு பேரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். ஏழு பேரில் ஒருவர் பாதிக்கப்பட்டவரின் சகோதரர்” என்றார்.